Tamilnadu

“உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ”: பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இரண்டாவது நிதிநிலை அறிக்கையை (2022 - 2023) நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இல்லம் தேடி கல்வித் திட்டம் நாட்டிற்கு முன்னோடி திட்டமாக உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும்.

அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தப் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.

முன்மாதிரிப் பள்ளிகளை அரசு தொடங்கும். கல்லூரிகளுக்கு ரூ.1000 கோடி செலவில் சிறப்புத் திட்டம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்போம்.

6 முதல் 12 வகுப்பு அவரை அரசு பள்ளியில் படித்துப் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதத்தோறும ரூ. 1000 வழங்கப்படும். இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: 8 ஆயிரம் கோடிக்கு மேல் குறையப்போகும் வருவாய் பற்றாக்குறை.. பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் PTR தகவல்!