Tamilnadu
’உன்கூட வாழவே பிடிக்கல’ : மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன் - நடுவீதியில் நடந்த கொடூரம்!
மயிலாடுதுறை மாவட்டம், கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இந்த தம்பதிக்கு கேப்ரியல் பிரின்ஸ் மகளும், பெர்னிக்கா சஜன் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான வினோத்குமார் தினமும் மனைவியை அடித்து வந்ததால் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனையடைந்த அவரது மனைவி கடந்த 6 மாதமாகக் கணவரைப் பிரிந்து தனது பெற்றோரிடம் வசித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று மாலை புவனேஸ்வர் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்துள்ளார். அங்கு வந்த கணவன் வினோத்குமார் தான் திருந்தி விட்டதாகவும், இனி குடிக்கமாட்டேன் எனவும் கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
ஆனால் அவர், கணவனுடன் செல்ல மருத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் வினோத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!