Tamilnadu
சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும்போது சிறுமியிடம் அத்துமீறல் - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசு. இவர் தனது பகுதியில் இருக்கும் சிறுமியிடம் சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியும் அவரிடம் சைக்கிள் ஓட்ட கற்றுள்ளார்.
அப்போது, ராசு சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலிஸாரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராசுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறுமியை ராசு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !