Tamilnadu
நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. வனப்பகுதியில் சவாரி சென்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை !
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலையில் உள்ள வாகன சவாரி போலவே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் வாகன சவாரி சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது.
அதுசமயம் நேற்று மாலை சுமார் நான்கு மணிக்கு மேல் முதுமலை வன எல்லைக்குட்பட்ட கர்நாடகா, தமிழக வன எல்லை பகுதியில் கர்நாடக மாநில வனத்துறை வாகனம் மூலம் வனப்பகுதிக்குள் நான்கு சுற்றுலா பயணிகளுடன் வனப்பகுதிக்குள் சபாரி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து திடீரென ஒரு யானை சஃபாரி சென்ற வாகனத்தை துரத்த ஆரம்பித்தது.
உடனே சுதாரித்துக்கொண்டு ஜீப்பை இயக்கிய வாகன ஓட்டி தனது சாதுரியத்தால் பின்னோக்கி நீண்ட தூரம் வாகனத்தை இயக்கினார்.இதனால் வாகன ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் சபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!