Tamilnadu
“புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்த போது நடந்த விபரீதம்” : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பரிதாப பலி !
மயிலாடுதுறை மாவட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம். இவர் தனது வீட்டில் நேற்று புதிதாக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஹேமா அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர் தாயைத் தொட்ட இரண்டு வயது குழந்தை மீதும் மின்சாரம் பாய்யந்ததால் இந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்துபார்த்தபோது மூன்று பேரும் கீழே விழுந்து அசைவற்று கிடந்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலிஸார் மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு அவர்களது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!