Tamilnadu
ஆதரவாளர்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கும் ரவுடி பேபி சூர்யா.. டி.ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. மதுரையைச் சேர்ந்த இவர் முதலில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். பின்னர், ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.
அண்மையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆபாசமாகத் திட்டி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தர்ஷாவும் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷாவை கடந்த மாதம் 4ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரும் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கோவை டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!