Tamilnadu
வாட்டர் வாஷ் செய்த போது கரன்ட் ஷாக்; மயங்கிய நிலையிலேயே உயிரிழந்த உரிமையாளர்; தாம்பரம் அருகே சோகம்!
சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன் (43). சுதர்சன் நகரில் சொந்தமாக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் வாகனத்திற்க்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது திடிரென அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வரதராஜன் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக மின்சார வாரியத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வரதராஜனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சேலையூர் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!