Tamilnadu
”கருவில் இருப்பது ஆணா பெண்ணா என அறிய ரூ.8,000 வெட்டுங்க” - கையும் களவுமாக பிடிபட்ட அதிமுக பிரமுகர்!
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கதிரம்பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது.
அதனடிப்படையில் சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவினர், திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி மகிமை கனரன் தோட்டம், என்கிற காட்டுப் பகுதியில் ஒரு குடிசை கூடாரத்தில் சுமார் 10 பெண்களை அமர வைத்து அவர்களுடைய கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது ஸ்கேன் மூலமாக கண்டறியப்பட்டு வருவதை கண்காணித்தனர்.
அப்பொழுது சுகுமார் மற்றும் அதிமுக பிரமுகர் வேடியப்பன் ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் கண்டறிய ஒவ்வொருவரிடமும் 8000 ரூபாய் என பணத்தை பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே 4 முறை கைது செய்து சிறை சென்றவர் எனவும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!