Tamilnadu
குழந்தையை பற்றி கூறாததால் மனவேதனை: பூச்சி மருந்து குடித்த பால் வியாபாரி; நிலக்கோட்டை அருகே விபரீதம்!
நிலக்கோட்டை உச்சணம்பட்டியைச் சேர்ந்த கணேசன் திண்டுக்கல் செட்டியபட்டியில் தங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார்.
25 வயதான கணேசனின் மனைவி ரேவதி (23). இருவருக்கு 2 ஆண்டுகளுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மாதந்தோறும் தவறாது வீட்டுக்கு வந்து மனைவியை பார்த்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் கணேசன்.
இப்படி இருக்கையில் அண்மையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைக்கு பெயர் வைத்ததை ரேவதி தனது கணவனுக்கு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறாராம்.
இதனால் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததை கூட சொல்லாமல் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான கணேசன் உச்சணம்பட்டியில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்தை குடித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிந்த அக்கம்பக்கத்தினர் கணேசனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கணேசன் உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!