Tamilnadu
”காதலி பிரிந்து சென்றதால் விரக்தி; தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்” - புழல் அருகே பரிதாபம்!
சென்னையை அடுத்த புழலில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் கோயம்பேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென அப்பெண் தனது காதலை கைவிடும் படி கூறியதால் மனமுடைந்து பெற்றோர்களிடம் பேசாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் தூங்க செல்வதாக கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த தம்பி சந்தோஷ் கதவை தட்டி திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஃபேன் மாட்டும் ஊக்கில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது பற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!