Tamilnadu
OPSன் சொந்த தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டிய தி.மு.க; விழிப்பிதுங்கி நிற்கும் அ.தி.மு.க!
ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
21 மாநகராட்சிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே கைப்பற்றும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை திமுக கைப்பற்றி வருகிறது. அதுபோக, அதிமுகவினரின் சொந்த தொகுதிகளிலும் திமுக வெற்றியை ருசித்து வருகிறது.
Also Read: ஒரு ஓட்டு கூட பெறாத அ.தி.மு.க வேட்பாளர்.. மோசமான சாதனையில் பா.ஜ.கவோடு போட்டி போடும் அ.தி.மு.க!
அவ்வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்திற்குட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்கு கைப்பற்றியிருக்கிறது திமுக.
அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி, திருப்பூர், சேலம், ஈரோடு என வளைத்து வளைத்து திமுகவின் வெற்றிக் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. இவை அனைத்தும் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!