Tamilnadu
மீண்டும் ஒத்த ஓட்டு வாங்கிய பா.ஜ.க.. தி.மு.க வேட்பாளரிடம் படுதோல்வி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது.அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றுகிறது. மேலும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களை தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டியே அ.தி.மு.க-வால் வெற்றி பெறமுடியவில்லை.
அதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி தனியாகத் தேர்தலை சந்தித்த பா.ஜ.க வேட்பாளர்கள் டெபாசிட்கூட வாங்க முடியாமல் படுதோல்வியடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு பவானி சாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளார்.
இவருக்கு பா.ஜ.கவினர் கூட ஒட்டுபோடவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், மீண்டும் ஒத்த ஓட்டு பா.ஜ.க இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!