Tamilnadu
காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. வீடியோ காலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ரியாஸை பிரிந்து மகளுடன் தனியாக சென்றுவிட்டார்.
இதையடுத்து ரியாஸ் பெங்களூரிவில வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வேலை தேடிவந்துள்ளார். மேலும் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் ரியாஸ் விரக்தியில் இருந்துள்ளார்.இதையடுத்து சம்பவத்தன்று தனது நண்பர் ஒருவருக்கு ரியாஸ் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
அப்போது, என்னால் வாழ முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிய படியே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடியோவில் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் போலிஸார் ரியாஸ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!