Tamilnadu
வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. வாடகைக்கு இருந்தவரை கத்தியால் வெட்டிய உரிமையாளர் கைது!
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். மேலும் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆறுமுகம் வீட்டை காலி செய்து கொடுக்கும்படி சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் ரூ. 50 ஆயிரம் திருப்பி கொடுத்தால்தான் வீட்டை காலி செய்ய முடியும். இந்த பணத்தைக் கொண்டுதான் வேறு வீட்டிற்கு முன்பணம் கொடுக்கமுடியும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் வீட்டை காலி செய்து கொடுக்கும்படி ஆறுமுகம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” : பதிவுத் தபால் சேவையை நிறுத்தம் - சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!
-
தமிழ்நாடு வரும் ஒன்றிய அமைச்சர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?
-
“சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை என்ன?” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பு : கன்னியாஸ்திரிகள் கைது சம்பவத்திற்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
“இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!