தமிழ்நாடு

விடிய விடிய முழு போதை; காசு கட்டாமல் எஸ்கேப் ஆக முயற்சி; ஸ்டார் ஓட்டலை சூறையாடிய வக்கீலுக்கு காப்பு!

ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து விடிய விடிய மது அருந்தியதற்கு காசு கேட்டதால் பொருட்களை உடைத்து ரகளை செய்திருக்கிறார் வழக்கறிஞர் ஒருவர்.

விடிய விடிய முழு போதை; காசு கட்டாமல் எஸ்கேப் ஆக முயற்சி; ஸ்டார் ஓட்டலை சூறையாடிய வக்கீலுக்கு காப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் ரூம் எடுத்து முட்ட முட்ட குடித்ததற்கு பணம் கேட்ட போது ஸ்டார் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து வழக்கறிஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.

தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 11ம் தேதியன்று அறை எடுத்து தங்கிய வழக்கறிஞர் ஒருவர் விடிய விடிய மது அருந்திவிட்டு சாப்பிட்டிருக்கிறார்.

முழுதாக போதை ஏறியதை அடுத்து அறையை காலி செய்து புறப்பட முயன்றிருக்கிறார். அப்போது ஓட்டல் ஊழியர் அவர் குடித்ததற்கும், சாப்பிட்டதற்கும் தங்கியதற்கும் பில் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறார்.

விடிய விடிய முழு போதை; காசு கட்டாமல் எஸ்கேப் ஆக முயற்சி; ஸ்டார் ஓட்டலை சூறையாடிய வக்கீலுக்கு காப்பு!

இதனால் கோபப்பட்ட அந்த வழக்கறிஞர், அரை நிர்வாணத்தில் “நான் ஒரு வக்கீல், என் கிட்டையே காசு கேக்குறியா” என்ற பாணியில் ஓட்டல் ஊழியரை திட்டிவிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் ஓட்டலுக்கு விரைந்த போலிஸார் கலாட்டாவில் ஈடுபட்ட வழக்கறிஞரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரித்த போது, செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஆஸ்டின் என்பதும் இவர், இதற்கு முன்பும் இதேப்போன்று நட்சத்திர ஓட்டலுக்கு சென்று குடித்து காசு கட்டாமல் ரகளையில் ஈடுபட்டதும் இதை அவர் வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர் மீது தேனாம்பேட்டை போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இதனிடையே ஓட்டலில் அரை நிர்வாணத்தில் அட்டாகசம் செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories