Tamilnadu
’உன்னால குடும்பத்துக்கே அவமானம்’ : தம்பியை கடப்பாரையால் குத்தி கொலை செய்த அண்ணன் - விசாரணையில் பகீர்!
திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மூத்த மகன் ஐயப்பன். இளைய மகன் அருண்குமார். அருண்குமார் கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு அருண்குமார் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது பெண்கள் விவகாரம் காரணமாக இவரது வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி இவர் ஊருக்கு வரும்போது எல்லாம் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அண்ணன் ஐயப்பன் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து தம்பி அருண்குமாரைக் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அருண்குமார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த தம்பியையே அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!