Tamilnadu
தடுமாறிய மூதாட்டி.. தோள் கொடுத்து காலணி அணிவித்த டி.எஸ்.பி. - குடியாத்தம் நகராட்சியில் நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்திலும் 36 வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவ்வழியே நடந்து வந்த மூதாட்டி ஒருவரின் காலணி இடறியிருக்கிறது. கையில் பை வைத்திருந்தால் தடுமாறியபடியே நடந்து வந்திருக்கிறார் மூதாட்டி.
இதனைக் கண்ட டி.எஸ்.பி ராமமூர்த்தி சிறிதும் யோசிக்காமல் மூதாட்டியின் காலணியை சரி செய்து அவருக்கு அணிவித்திருக்கிறார். பட்டப்பகலில் பொதுவெளியில் நடந்த இந்த நிகழ்வு அப்பகுதியினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோக மூதாட்டி டி.எஸ்.பி காலணி மாட்டிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!