Tamilnadu
“என் மேல கேஸ் கொடுத்தாலும் பரவாயில்ல.. வீடு புகுந்து வெட்டுவேன்” : வேட்பாளர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி!
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, “அ.தி.மு.க-வில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். எவர் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரெவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.
இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சி தேர்தலின்போது, என் மேல் உள்ள கேஸ், தேர்தலையே பார்க்கவிடல. அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. கட்சி மாறுவது தெரிந்தால், இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என மிரட்டும் வகையில் பேசியுள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!