Tamilnadu
நகை ஆசையால் வந்த வினை.. நகைக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 4 கோடி சுருட்டிய தம்பதி - நடந்தது என்ன?
சேலம் மாவட்டம், வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் - லலிதா. இந்த இளம் தம்பதி லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், 6 பவுனுக்கு நங்க நகை டெபாசிட் செய்தால் வட்டியாக ரூ. 25 ஆயிரம் தரப்படும் என இவர்கள் அறிவித்திருந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பலரும் நகையை டெபாசிட் செய்துள்ளனர். ஆனால், தம்பதியினர் கூறியபடி யாருக்கும் தொகை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று நகைக்கடை பூட்டியிருந்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தம்பதியினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கும் வீடு பூட்டியே இருந்தது.
இதனால் பொதுமக்கள், தங்கராஜின் மாமனார் வீட்டிற்கு முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார் நகை கடை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தங்கராஜ் மற்றும் கடை ஊழியர்கள் கடையிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு காரில் செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து தலைமறைவான தம்பதிகளை போலிஸார் தீவிரமான தேடி வருகின்றர். மேலும், இவர்கள் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 4 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!