Tamilnadu

”கம்மி விலையில் கார் வாங்கி தரேன்” நைசா பேசி 2.15 கோடியை சுருட்டிய பெங்களூரு கிளப் ஓனர் சிக்கியது எப்படி?

சென்னை , K.K நகர், பாரதிதாசன் காலனி என்ற இடத்தில் பாரத் பெங்களுரு புட்பால் கிளப் நடத்தி வரும் நவீன் என்பவர், சென்னையைச் சேர்ந்த குமரவடிவேல் என்பவரிடம், TOYOTA கார் நிறுவனத்தினர் புதிய கார்களை மார்கெட்டில் விற்கும் விலையில் இருந்து 30% சதவீதம் தள்ளுபடியில் குறைவாக தனது மேற்படி கிளப்புக்கு தருவதாக கூறியுள்ளதால், உங்களுக்கு அதே விலையில் கார்களை தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய குமரவடிவேல் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மொத்தம் 19 கார்கள் வேண்டும் எனக் கூறி மொத்தம் ரூபாய் 2,15,88,656 (2.15 கோடி) - நவீன் நடத்தி வரும் கிளபபின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், நவீன கூறியபடி கார்களை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றியதால், குமரவடிவேல் இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுத்தார்.

நவீன்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளரின் அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர்-II ஆலோசனையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் நம்பிக்கை மோசடி புலனாய்வு பிரிவில் (EDF-I) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆவணங்கள் நம்பிக்கை மோசடி புலனாய்வு பிரிவு (EDF-I) உதவி ஆணையாளர் .ஜான் விக்டர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பிச்சி தலைமையில் தலைமைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் கூறியது உண்மையென தெரியவந்தது. அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி வழக்கில் சுமார் ரூ.2.15 கோடி வரையில் வங்கியின் மூலம் பணம் பெற்று மோசடி செய்து தலைமறைவான நவீன் (31) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் நவீன் நேற்று (26.01.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.