Tamilnadu
உடல்நிலை பாதிக்கப்பட்ட வ.உ.சி கொள்ளுப்பேத்தி : முப்பதே நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு.,!
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத் செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி உடல்நலைக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
முன்னதாக இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த பதிவைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனே, மதுரை அரசு மருத்துவமனை முதல்வரைத் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தனியாக மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட்டு வ.உ.சியின் கொள்ளு பேத்திக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தமிழ்நாடு அரசின் இந்த துரித நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கும் சமூக வலைதளங்களில் பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!