Tamilnadu
”தொடர்ந்து 3வது முறையா ஜெயிச்சுட்டேன்; ரொம்ப பெருமையா இருக்கு” - மாடுபிடி வீரர் பிரபாகரன் நெகிழ்ச்சி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். ஆட்சியர் அனீஷ் சேகர், எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலில் கோயில்கள் மற்றும் ஊர் மரியாதை காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பின்னர் பிற காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
7 சுற்றுகளாக மாலை 5 மணிவரை நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரையில் உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
பிரபாகரனுக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி இரண்டாமிடம் வந்த மாடுபிடி வீரர் கார்த்திக் ராஜாவுக்கு எல்.இ.டி. டிவி பரிசாக வழங்கப்பட்டது,
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. ஆனால் மாடுகள் எல்லாம் முழு ஆற்றலோடு இருந்ததால் காளைகளை அடக்குவதில் சவாலாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!