Tamilnadu
கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.. விசாரணையில் பகீர் தகவல்!
நெல்லை மாவட்டம், பழவூர் தெப்பகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநராக இருக்கும் சுடலையாண்டி அடிக்க வெளியூர் சென்று வருவார். இதனால் மனைவி ஜெயலட்சுமிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பே சுடலையாண்டியை பிரிந்து தனியாக ஜெயலட்சுமி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்த சுடலையாண்டி மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து மனைவியின் தலையில் ஓட்டி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.
இது குற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுடலையாண்டியை கைது செய்தனர்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!