Tamilnadu
“70 ரூபாய் திருடிய மகளை தாக்கிய தாய்.. கொடூர தண்டனையால் நடந்த விபரீதம்” : பதற வைக்கும் ‘பகீர்’ சம்பவம் !
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் மகாலட்சுமி. இவர் தனது பெரியப்பா வீட்டிற் சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டில் ரூ.70 திருடி தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதைக் கண்டுபிடித்த சிறுமியின் தாய் மகாலட்சுமி அவரை கடுமையாக அடித்துத் திட்டியுள்ளார்.
மேலும், மகளுக்கு இனி திருடும் நினைப்பே வரக்கூடாது என நினைத்து அவருக்கு தண்டனையாகச் சூடு வைத்துள்ளார். அதுபோதாது என்று மிளகாய் புகையைச் சுவாசிக்கச் செய்துள்ளார்.
இதனால் சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி மகாலட்சுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி திருடியதால் அவரது தாய் சூடு வைத்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!