Tamilnadu

”சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்” - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதன்படி பொதுப் போக்குவரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ, பேருந்துகளில் 50 சதவிகித மக்களுக்கே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டப்பிரிவு நிர்வாகம்.

அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்க்கே ஜனவரி 10ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அனுமதி கிடையாது.

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான உரிய அடையாள அட்டையுடன் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். UTS செயலி மூலம் ஜனவரி 31ம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: முழு ஊரடங்கு தேவைப்படுமா? - WHO விஞ்ஞானி கூறும் பரபரப்பு தகவல்!