Corona Virus

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: முழு ஊரடங்கு தேவைப்படுமா? - WHO விஞ்ஞானி கூறும் பரபரப்பு தகவல்!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் வேளையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி ஊரடங்கு குறித்து கூறியுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: முழு ஊரடங்கு தேவைப்படுமா? - WHO விஞ்ஞானி கூறும் பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்தே முழுதாக மீண்டு வராத நிலையில் தற்போது மூன்றாவது அலையாக கருதப்படும் ஒமைக்ரான் பரவலால் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் சிக்கித் தவித்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமே கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவையில்லை. கொரோனா வைரஸ் இறுதிவரை நம்முடனேயே தொடர்ந்து பயணிக்கும். கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சக்கரை நோய், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளே அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories