Tamilnadu
ஜோராக நடக்கும் பொங்கல் தொகுப்பு விநியோகம்; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்.. இணையத்தை வென்ற புகைப்படங்கள்!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லும் மக்களை புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படம் இணையத்தை வென்றுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்பட்ட முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றான கொரோனா நிவாரணை தொகையை பெற்ற மூதாட்டிகளின் புகைப்படங்களையும் ஜாக்சன் ஹெர்பிதான் எடுத்திருந்தார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!