தமிழ்நாடு

தனக்கு வந்த கொரோனா நிவாரண தொகையை வைரல் பாட்டிக்கு அளித்த புகைப்படக் கலைஞர் - நாகர்கோவிலில் நெகிழ்ச்சி!

தனக்கு வந்த கொரோனா நிவாரண தொகையை வைரல் பாட்டிக்கு அளித்த புகைப்படக் கலைஞர் - நாகர்கோவிலில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை கொடுக்கும் பணி மாநிலம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் அருகே உள்ள கீழகலுங்கடியைச் சேர்ந்த 90 வயதான வேலம்மாள் என்ற மூதாட்டி தனக்கான நிவாரண தொகுப்புடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அந்த புகைப்படத்தை எடுத்தவர் அதே நாகர்கோவையிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. அவர் எடுத்த இன்னும் சில மூதாட்டிகளின் புகைப்படங்களும் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தோடு சேர்ந்து வைரலானது.

சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!” எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வைரல் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி இணையதள செய்திக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

புகைப்பட கலையின் மீதான ஆர்வத்தால் உறவினரின் உதவியோடு முதலில் வீடியோகிராஃபராக உள்ளூர் சேனலில் பணியை தொடங்கிய ஜாக்சன் ஹெர்பி, சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றிலும் போட்டோகிராஃபராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு நாகர்கோவிலுக்கே வந்தவரிடம் கேமரா வாங்குவதற்கான பணம் இல்லாமல் போனது.

மகனின் ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்த ஜாக்சனின் தந்தை தனது நிலத்தை விற்று கேமராவும் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த கேமிராவின் தற்போது வேலம்மாள் பாட்டி உள்ளிட்ட பலரது புன்னகையை படம் பிடித்து முதலமைச்சர் வரை சென்றடைந்திருக்கிறது.

தான் புகைப்படக் கலைஞராக வருவதற்கான உந்துதலாக இருந்தது ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ். எனக் கூறிய ஜாக்சன் ஹெர்பி தன்னுடைய திறமையை பார்த்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணக்குமார் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக நியமித்தார்.

அதனைத் தொடர்ந்து கொரோனா முதல் இரண்டாவது அலை என தனது புகைப்படக் கலைஞராக பணி தொடர்கிறது என்கிறார். தற்போது கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியதை அடுத்து அதற்காக கீழகலுங்கடியில் உள்ள நியாய விலைக் கடைக்கும் சென்றிருந்தேன்.

அங்கு நிவாரண பொருட்களை வாங்கியதோடு திண்ணை ஒன்றில் அமர்ந்திருந்த மூதாட்டி வேலம்மாளை போட்டோ எடுக்க முற்பட்டேன். அப்போது பணத்தை காட்ட மாட்டேன் அது சேலை வாங்க வைத்திருப்பதாகவும் கூறினார்.

பின்னர் போட்டோ எடுத்த பிறகு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கையில் தமிழ்நாடு அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் 5,000 தனது வங்கி கணக்கில் வந்திருப்பதாக மெசேஜ் வந்தது. அதனை கண்டதும் வேலம்மாள் பாட்டிக்கு சேலை வாங்குவதற்காக ஏடிஎம்-ல் இருந்து ₹2000 எடுத்து மூதாட்டியின் வீட்டுக்கேச் சென்று கொடுத்ததாக கூறியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதை அடுத்து நாகர்கோவில் மாநகராட்சி கமிஷ்னர் ஆஷா அஜித் மூலம் DIPR இயங்குநரே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்று ஜாக்சன் கூற ஒரு நாளாவது முதலமைச்சரின் போட்டோகிராஃபராக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories