தமிழ்நாடு

புன்னகையை சிந்திய வேலம்மாள் பாட்டியின் சோக வாழ்க்கை - யார் இவர்? வைரல் ஆனது எப்படி ?

புன்னகையை சிந்திய வேலம்மாள் பாட்டியின் சோக வாழ்க்கை - யார் இவர்? வைரல் ஆனது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் தனது முதல் கையெழுத்தாக 5 திட்டங்களை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒன்று ஊரடங்கால் வாடும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்குவது. அதில் ஏற்கெனவே முதல் தவணை ₹2,000 வழங்கப்பட்டுவிட்டதை அடுத்து நேற்று முதல் இரண்டாவது தவணை ₹2,000 வழங்கும் பணி தொடங்கியது.

அதனூடே 10க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் அடங்கிய பை தொகுப்பையும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முதல் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி வேலம்மாள் தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக்கொண்டு பற்களே இல்லாத வாயால் சிரிக்கும்படி இருந்த புகைப்படம் சமூக வலைதளங்கள் வாயிலாக பட்டித்தொட்டியெங்கும் பரவி பிரபலமானது.

அந்த புகைப்படத்தை எடுத்தவர் அதே நாகர்கோவையிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. அவர் எடுத்த இன்னும் சில மூதாட்டிகளின் புகைப்படங்களும் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தோடு சேர்ந்து வைரலானது.

சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!” எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் பேசியிருந்த வேலம்மாள் பாட்டி “₹2,000 கொடுத்த ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றி, வீடு இல்லை. வேலையும் இல்லை. மழை வந்தாலும் ஒதுங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறேம். வந்து பாருங்கய்யா” என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது புன்னைகையால் அனைவரையும் ஈர்த்த மூதாட்டி வேலம்மாளுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. திருப்பூரில் பூட்டிக் கிடக்கும் மகளின் வீட்டு முன்புதான் இந்த வேலம்மாள் பாட்டி வசித்து வருகிறார். மகளின் வீட்டிற்குள் மூதாட்டியை தங்க வைக்க ஊர் மக்கள் முயற்சித்தும் அதை நடந்தபாடில்லை. அக்கம்பக்கத்தினரும் தன்னார்வலர்களும் கொடுக்கும் உணவை வைத்தே தன்னுடைய காலத்தை போக்கி வருகிறார் வேலம்மாள் பாட்டி.

banner

Related Stories

Related Stories