Tamilnadu
கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்.. மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி: நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகரத்தைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ரோனிஷா என்ற பெண்ணுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து கல்லூரியில் படித்து வந்த ரோனிஷா கணவர் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கணவன் அகிலன் வேலைக்குச் சென்றுள்ளார்.அப்போது வீட்டில், ரோனிஷா மட்டுமே தனியா இருந்தார்.
பின்னர், உறவினர் சிலம்பரசி என்பவர் ரோனிணா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கல்லூரி படிக்கும் போதே திருமணம் செய்து கொண்டதால் தோழிகள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
Also Read
-
தமிழ்நாடு முழுவதிலும் ’தியாகச் சுவர்கள்’ எழுப்பப்படும்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
-
“‘அரசைத் திருடும் ஆபரேஷன்’ - அசிங்கப்பட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்”: முரசொலி தலையங்கத்தில் கடும் தாக்கு!
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?