Tamilnadu
25 பவுன் நகை திருட்டு.. கைரேகை சிக்காமல் இருக்க வீட்டிற்குத் தீவைத்த கொள்ளை கும்பல் - பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்
பின்னர், போலிஸிடம் கைரேகை சிக்காமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் வீட்டிற்குத் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து மணிமாறன் வீடு எரிந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்து கட்டில், மெத்தை, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, நகையைக் கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்துத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!