Tamilnadu
துப்பாக்கியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது.. போலிஸிடம் சிக்கியது எப்படி - பகீர் சம்பவம்!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாசன் மகன் ஜெபராஜ் (39). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் பதறிப்போன அவர் சத்தம் எழுப்பவே அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். அவர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மர்ம நபர் ஜெபராஜ் பாக்கெடில் இருந்த 1500 ரூபாயை பறித்துச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெபராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலிஸார் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மதுரை என்ற சேர்மராஜ் (26) என்பதும் இவர் மீது 2 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சமீபத்தில் அங்கிருந்து இங்கு வந்து குடும்பத்துடன் நெய்யூரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலிஸார் அவரிடம் இருந்த துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலிஸார், சேர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!