Tamilnadu
’சரபோஜி கல்லூரி டூ சரஸ்வதி மஹால் நூலகம்’ - அரசு விழா, ஆய்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரவுண்டப் (Album)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.,30) தஞ்சாவூரில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.
அப்போது, 98.77 கோடியே 69,000 மதிப்பீட்டில் முடிவுற்ற 90 திட்டப்பணிகளை திறந்து வைத்து 894 கோடியே 56 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கல்லூரில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைநயம் மிக்க படைப்புகளையும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் அரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். அப்போது மேடையில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சக்கரபாணி ஆகியோர் இருந்தனர்.
விழா முடிவில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் உட்பட அரசு விழாவை முடித்துக்கொண்டு தஞ்சாவூரில் உள்ள உலக பிரபலம் கொண்ட சரஸ்வதி மஹால் நூலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உட்பட பல அதிகாரிகளும் இருந்தனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!