Tamilnadu
“ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி” : பயணிகள் கண் முன்னே நடந்த ‘பகீர்’ சம்பவம் !
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரண்யாஸ்ரீ என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகக் காதல் ஜோடிகள் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பின்னர், சென்னை - அரக்கோணம் விரைவு பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்ட சில பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. பின்னர் இதுகுறித்து ரயில்வே போலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த ரயில்வே போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!