Tamilnadu

”புத்தகம், சீருடை போல் இனி இதுவும் வழங்க முடிவு” - திமுக தலைமையிலான தமிழக அரசு அசத்தல் திட்டம்; அது என்ன?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், உணவு என பல்வேறு பலன்கள் தமிழ்நாட்டு அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்காக புதிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப் பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மட்டும் Rain coats, Ankle Boots வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.06 இலட்சம் மழைக் கோட்டுகளும், 1.15 இலட்சம் ஆங்கிள் பூட்ஸ், 1.12 இலட்சம் கம்பளி சட்டைகள், 25.89 இலட்சம் ஜோடி காலணிகள் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது.

இதுபோக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு 35 இலட்சம் (shoes) கால் ஏந்திகள், 71.30 இலட்சம் ஜோடி காலுறைகள் வழங்கப்படவுள்ளது

இது எதிர்வரும் கல்வியாண்டானா 2022-23ல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்கள் சீருடைகள் வழங்கும் போதே Rain Coat, Ankle Boots வழங்கிட முடிவு எட்டப்பட்டுள்ளது.

Also Read: “அரசு ஊழியர்களுக்காக கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன தெரியுமா..?” - பட்டியலிட்ட முதல்வர்!