Tamilnadu
சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் உடல்.. நகைக்காக நடந்த கொலை: விசாரணையில் பகீர் தகவல்!
கோவை சரவணம்பட்டி பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகி நிலையில் சிறுமியின் சடலத்தை போலிஸார் மீட்டனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், உயிரிழந்த சிறுமி டிசம்பர் 11ம் தேதியிலிருந்து காணவில்லை என மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
இதையடுத்து போலிஸார் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுமியின் தாய் கலைவாணியின் நெருக்கிய நண்பர் முத்துக்குமார் என்பவர் நகைக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது.
சிறுமியின் தாய் கலைவாணியும், முத்துக்குமாரும் மூன்று ஆண்டுகளாக நண்பர்களான நெருங்கிப் பழகிவந்துள்ளனர். இதனால் முத்துக்குமாரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகையைக் கலைவாணி வாங்கியுள்ளார்.
பின்னர், இதைத் திருப்பி கேட்டபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகளிடம் இருக்கும் நகைகை வாங்கி தருவதாக முத்துக்குமாரிடம் கலைவாணி தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுமியை வீட்டிற்கு அழைத்து நகையைக் கேட்டுள்ளார் முத்துக்குமார். அப்போது சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவரின் கழுத்தை நெரித்து முத்துக்குமார் கொலை செய்துள்ளார்.
பிறகு, சிறுமியின் சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டி குட்டையில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!