Tamilnadu
அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்புகள்; புதிய கெடுபிடிகளை விதித்த இந்திய விமான நிலைய ஆணையம்!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் விமான நிலைய ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
இதுவரை சா்வதேச விமான நிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில் இப்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இந்திய விமானநிலைய ஆணையம்.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் விபரம்:
கேரளா மாநிலத்திலிருந்து, தமிழகம் வரும் பயணியர் அனைவரும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் கண்டிப்பாக அவசியம் தேவை.
பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தமிழகம் வரும் விமான பயணியர் அனைவருக்கும் இ – பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணி, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.
சர்வதேச பயணியரை பொறுத்தவரை, ஒன்றிய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். இதே போல, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!