Tamilnadu
”CCD, Starbucksக்கு இணையாக Indco Tea வண்டி” - நடமாடும் தேநீர் கடையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சிறு, குறு & நடுத்தர தொழில் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 20 நடமாடும் டீ விற்பனை கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Indcoserve நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாஹூ, தேயிலை விவசாயிகளின் நலன், Indcoserve-இன் வியாபாரத்தை விரிவாக்குதல், பழங்குடி மக்கள் & இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடமாடும் டீ விற்பனை கடைகள் முதற்கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடமாடும் டீ கடைகளில் டீ, காபி & சிறு தானிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், Cafe Coffee Day, Starbucks போல் ஒரு பிரபலமான Brand ஆக நடமாடும் டீ கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இதன் சேவை விரிவாக்கப்படும் என்றும் சுப்ரியா சாஹூ பேசினார்.
Indcoserve நிறுவனத்தின் தரமான பொருட்களை சிறந்த முறையில் ஆன்லைனிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரியா சாஹூ பேசியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடமாடும் டீ கடை தொடக்க நிகழ்வில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, Indcoserve CEO சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!