Tamilnadu
வாட்ஸ் அப்பில் வீடியோ ஷேர் செய்ததால் கொலை மிரட்டல்; சென்னை அயனாவரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன் என்ற தாஸ். இவர், நேற்று இரவு அயனாவரம் திருவள்ளுவர் நகர் அம்பேத்கர் மன்றம் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஹரி என்பவர் மேற்குறிப்பிட்ட புகார்தாரரிடம் சென்று கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்ற வீடியோவை எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் செய்தி பரப்பியதாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற ஹரி (31) மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது. இவரை பிடித்து அயனாவரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரோடு சேர்த்து மிரட்டிய ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் என இருவரையும் தேடி வருகின்றனர்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!