Tamilnadu
“சொந்த பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன்” : போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிவாசல் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மாதர். இவரது மனைவி சலிமா பீ. இவர் வீட்டின் குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். மேலும், இவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால் உறவினர் நகையைக் கொள்ளையடிக்கும் போது யாரோ கொலை செய்துள்ளதாக நினைத்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் பாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாட்டியின் உறவினர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் பாட்டியின் மகள் வழி பேரனான சல்மான் தான் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நகைக்கு ஆசைப்பட்டு பாட்டியைக் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, நகைகளைத் திருடிச் சென்றதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொலைக்கு உறவினர் சவுக்கத் அலி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து பாட்டியைக் கொலை செய்த பேரன் மற்றும் உறவினர் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!