Tamilnadu
“Instagram-ல் போலி கணக்கு துவங்கி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை” : இளைஞரைக் கைது செய்து போலிஸ் அதிரடி!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நியாஸ். இளைஞரான இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான ஒருபக்கத்தை உருவாக்கி, பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதில், திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம், பெண் குரலில் பேசி நட்பாகப் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியின் புகைப்படங்களை வாங்கி அதை, ஆபாசமாகச் சித்தரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியுள்ளார்.
இதைப்பார்த்து, அந்த மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு மாணவிக்கு தொலைப்பேசியில் அழைத்து, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும் இல்லை என்றால், இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார் .
இது குறித்து கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாஸை கைது செய்தனர்.
மேலும் அவரது செல்போனை போலிஸார் ஆய்வு செய்தபோது, பல்வேறு இளம் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மேலும் கைதான நியாஸிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!