Tamilnadu
தமிழக அரசு வேலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை; தமிழ் மொழியை கட்டாயமாக்கும் அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை போட்டித்தேர்வுகளை நடத்தி வருகின்றன.
போட்டித்தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% இடங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 3 & 4 தேர்வுகளில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும், தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது TNPSC, TRB, MRB, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய முகமைகள் நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழித் தாளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்பாணை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான அறிவிப்பாணை ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!