Tamilnadu
“கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சாதியப் பாகுபாடு கவலைக்குரியது” : தமிழச்சி தங்கபாண்டியன் MP பேச்சு!
ஒடுக்கப்பட்ட சாதிப்பின்னணியில் உள்ள மக்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான பாகுபாடு மிகவும் கவலைக்குரியது என கழக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் வலியுறுத்திய கோரிக்கை வருமாறு:-
ஒடுக்கப்பட்ட சாதிப்பின்னணியில் உள்ள மக்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான பாகுபாடு மிகவும் கவலைக்குரியது. நமது கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் மத்திய கல்வி அமைச்சகம், மிஷன் பயன்பாட்டு முறையின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. சமூகங்களில் இருந்து ஆசிரிய பணியிடங்களை செப்டம்பர் 2022-க்குள் நிரப்ப இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.), ஐ.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களை கேட்டுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து சில ஐ.ஐ.டி.கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், அதற்கான செயல்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெறவில்லை. மேற்கூறிய நிறுவனங்களில் விரைவான ஆட்சேர்ப்பு இயக்கத்தை உறுதிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோல அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக மாதாந்திர அறிக்கைகள் பொதுஅளவில் கிடைக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு கோட்பாடுகளின்படி ஆட்சேர்ப்பு இயக்கம் நடைபெறுவதை உறுதிசெய்ய சிறப்பு உயர்நிலைக்குழுவும் அமைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!