Tamilnadu
“தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமா?” : மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கம்!
கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது. தடுப்பூசி செலுத்தவேண்டும் என அறிவுறுத்தவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மண்டல மின்சார வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்/ மதுரை மண்டலம் அலுர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை 07.12.2021 சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சுற்றறிக்கை குறித்து மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “மின்சாரவாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்கரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது. தடுப்பூசி செலுத்தவேண்டும் என அறிவுறுத்தவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம் அளித்துள்ளார்.
Also Read
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!