Tamilnadu
”நெகட்டிவ் வந்தாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்” : ஒமைக்ரான் குறித்து சென்னை RGGH முதல்வர் விளக்கம்!
சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் தேரணி ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 4வது தளத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு அறிகுறிகள் இருப்பின் அவர்களை தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் 150 படுக்கைகள் உள்ளது. அதில் 50 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன.
ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட வசதிகள் களையப்படாமல்தான் உள்ளது. மொத்தம் 2050 படுக்கைகளில் 1555 ஆக்சிஜன் படுக்கைகளும் 450 ஐ.சி.யு படுக்கைகளும் உள்ளன. ஒமைக்ரான் வைரஸை பொறுத்தவரை இதுவரை 23 நாடுகளில் 267 பேருக்கு உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா பெண் மருத்துவர் இது குறித்து பேசுகையில் உடல் வலி, சோர்வு, வியர்த்து போதல் உள்ளிட்டவை அறிகுறிகளாக உள்ளன எனவும் வாசனை, சுவை ஆகியவை போகவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு ஏற்கெனவே செய்து வருகிற ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நெகடிவ் என வந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
மக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. முன்பு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் நம்மை காக்கும் ஒன்றாகும். கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் வேண்டும்.” என்றார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!