Tamilnadu
“ராஜேந்திர பாலாஜிக்கு எதிரா எல்லா ஆதாரங்களும் இருக்கு” : ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்திமூன்று சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நல்லதம்பியும் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Also Read
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)
-
மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!
-
ED வழக்கின் அறிக்கையை எப்படி முதலமைச்சர் காட்ட முடியும்? : சட்டப்பேரவையில் கோவி.செழியன் கேள்வி!