Tamilnadu

25 கிலோ யானைத் தந்தம்.. கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த கும்பல்.. வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் யானைத் தந்தங்கள் கடத்த இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு மாதங்களுக்கு முன்பே தகவல் கிடைத்துள்ளது. இதனால், வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று சோகத்தூர் நான்கு வழி சந்திப்பில் வனத்துறை போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலிஸாரை பார்த்த உடன் தப்பிச் சென்றனர்.

பிறகு காரை சோதனை செய்தபோது 25 கிலோ 400 கிராம் எடைகொண்ட யானையின் தந்தங்கள் இருந்தைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து காரில் வந்த பவளந்தூரைச் சேர்ந்த சின்னசாமி, பிலிகுண்டைச் சேர்ந்த வினோத், திருப்பூரைச் சேர்ந்த கார்த்தி ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், கர்நாடகா மாநிலத்திலிருந்து யானைத் தந்தங்கள் கடத்தி வரப்பட்டதும், இதைத் திருப்பத்தூரைச் சேர்ந்த இரண்டு பேருக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.மேலும் இந்த கும்பல் போலிஸாரிடம் சிக்கியதை அடுத்து, பின்னால் மற்றொரு காரில் யானை தந்தம் வாக்கு வந்த கும்பல் இவர்கள் போலிஸாரிடம் சிக்கியதைப் பார்த்து உடன அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து கைதான மூன்று பேரிடமும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடத்தலி தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது.

Also Read: கிரிப்டோ கரன்ஸியால் நடந்த விபரீதம்.. ரூ.70 லட்சத்தை இழந்த பேராசிரியர் தற்கொலை - தெலங்கானாவில் அதிர்ச்சி!