Tamilnadu
எப்ப பார்த்தாலும் செல்போன் தானா.. பெற்றோர் கண்டித்ததால் வேதனை - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
அரியலூர் மாவட்டம், நல்லநாயக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், செல்வகுமார் வீட்டில் எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் செல்வகுமார் விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டில் விஷம் அருந்தியுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வகுமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் விஷம் அருந்தி கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
யோக்கியர் வேஷம் போடும் பழனிசாமி : அ.தி.மு.க ஆட்சி ஊழலை மீண்டும் நினைவூட்டும் முரசொலி!
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!