Tamilnadu
”இனி மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது” - மருந்தகங்களுக்கு சென்னை போலிஸ் முக்கிய ஆணை!
மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறை கவனத்திற்கு தெரியவந்தது.
இதனை அடுத்து போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வது குறித்து சில கட்டுப்பாடுகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது எனவும் மேலும் அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் என்பதை அனைத்து மருந்து சுவரொட்டிகளை விற்பனை செய்ய இயலாது கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய ஒட்டியிருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மருந்துகள் விற்பனை செய்யும் விபரங்களை முறையான பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும் என்றும் அனைத்து மருந்து கடைகளிலும், சாலைகளை நோக்கியும், மருந்து கடைகளுக்குள்ளும் CCTV கேமராக்களை கண்டிப்பாக பொருத்தவேண்டும் என மருந்து உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!