Tamilnadu
வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்து உருவாகி வருவதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!
-
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!
-
இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!